பலாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா…?
- பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்.
பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்த பழம் எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடியது அல்ல. சில ஒரு குறிப்பிட்ட சீசனில் தான் கிடைக்கக்கூடியது. இப்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இப்பழம் சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. எனவே இது மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் உண்டாகும் நோய் தொற்றுகள் நம்மை அணுகாதவாறு தடுக்கிறது. மேலும் இது உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
இரத்தம்
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுவதால், இது ரத்தம் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இதய நோய் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கண்
பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமாக காணப்படுவதால் இது கண் சம்பந்தமான பிரச்சினைகள், அதாவது மாலைக் கண் நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், புரதச்சத்து ஆகிய சத்துக்கள் இப்பழத்தில் காணப்படுவதால் புற்றுநோய் வருவதையும் தடுக்கும் ஆற்றலை இது உண்டாக்குகிறது.
வயிற்று பிரச்சனை
பலாபழத்தில் நார்ச்சத்து காணப்படுவதால், அல்சர், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.