பிரதமர் நரேந்திர மோடி லண்டன் பயணத்தின் போது பேசியது சரியில்லை !கலங்கிய மருத்துவ கூட்டமைப்பு
பிரதமர் நரேந்திர மோடி லண்டன் பயணத்தின் போது தெரிவித்த சில கருத்துகள், நோயாளிகளுடனான தங்களது நல்லுறவை பாதிக்கும் என்று, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (Indian Medical Association – IMA) அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் கூட்டமைப்பு, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இங்கிலாந்து மருத்துவத்துறையில் இந்தியர்கள் பெரும்பங்களித்து வரும் நிலையில், பிரதமர் விமர்சித்திருப்பது அதிருப்தியளிப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மருத்துவர்கள் வெளிநாட்டு மாநாடுகளில் பங்கேற்பதாக மோடி கூறியது வருந்தத்தக்கது என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.