தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது – மா.சுப்பிரமணியன்!

Default Image
  • தமிழகத்தில் 1.01 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் 5.39 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் என்பதால் தடுப்பூசி போடுவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடுகள் குறைந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், ஒரே நாளில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தியதில் இது தான் அதிகபட்சம் எனவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது தமிழகத்தின் கையிருப்பில் 5,39,780 தடுப்பூசிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இதுவரை தமிழகத்திற்கு 1,10,41,030 தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், அதில், 1,01,30,594 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்