IPL 2018:ரயுடா,ரெய்னா மிரட்டலான ஆட்டம்!182 ரன்கள் குவித்த சென்னை அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் 20வது ஆட்டத்தில் மோதுகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விவரம்:எம்.எஸ். தோனி(கேப்டன்),ராயுடு, எஸ். வாட்சன், எஸ். ரெய்னா, சாம் பில்லிங்க்ஸ்,டு ப்ளேசிஸ், டி.ஜே. பிராவோ, ஆர்.ஜடேஜா, கரன் சர்மா, டி. சஹார், தாகூர் ஆகியோர் இடம் பெற்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),சஹா,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,சித்தார்த் கவுல்,பூயி,ஸ்டான்லகே ஆகியோர் இடம் பெற்றனர்.
பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் அடித்தது.சென்னை அணியின் பேட்டிங்கில் அதிக பட்சமாக அம்பதி ரயுடா 78,சுரேஷ் ரெய்னா 54,தோனி 25 ரன்களும் அடித்தனர்.ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர்,ரசித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.