#Breaking:”ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து”: அமைச்சர் நாசர்…!

- ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அருகேயுள்ள சித்தோடு ஆவின் பால் பண்ணையில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் கூறியதாவது: “கொரோனோ காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா?,என்பது குறித்து முதல்வர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து வருகிறோம்.
கொரோனோ காலம் என்பதால் விவசாயிகளுக்கு பால் நிலுவைத்தொகை உள்ளது, பால் நிலுவைத் தொகை தொடர்பாக கவனத்திற்கு வந்தால் சரிசெய்யப்படும்.அதுமட்டுமல்லாமல்,ஆவின் ஒன்றியங்களில் பணி நியமனத்தில் முறைகேடு இருப்பதால்,விரைவில் புதிய மணி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியாகும்.
மேலும்,”ஆவின் பாலகத்தில் வேறு பொருட்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும்”, எனவும் எச்சரிக்கை விடுத்தார்.