ஜி-7 மாநாட்டில் வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்!
- இங்கிலாந்தில் ஜி-7 மாநாடு ஜூன் 11 முதல் 13 வரை நடைபெற்று வருகிறது.
- இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வாளால் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஆசிய நாடுகள் அடங்கிய ஜி 7 மாநாடு ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் இளவரசர் சார்லஸ் அவரது மனைவி மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் அண்மையில் காலமானர். அவரது மறைவிற்குப் பின்பதாக இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளக்கூடிய முதல் நிகழ்வு இது தானாம். இந்நிலையில் இந்த நிகழ்வின் பொழுது ஜி-7 கூட்டத்தின் தலைவர்கள் இங்கிலாந்து ராணியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவருடன் பேசி மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த மாநாட்டிற்கு இடையில் இரண்டாம் எலிசபெத் கேக் வெட்டக்கூடிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்பொழுது இங்கிலாந்து ராணி வாளால் கேக் வெட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.