மின்கம்பத்தில் ஏறி கம்பிகளில் சிக்கிய குட்டி கரடி..! வைரல் வீடியோ..!
- அரிசோனா மாகாணத்தில் கரடி ஒன்று மின்கம்பத்தில் ஏறி மின்கம்பிகளில் சிக்கியுள்ளது.
திங்கள் கிழமையன்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் புறநகர் பகுதியில் இருக்கும் மின்கம்பத்தில் ஒரு சிறிய கரடி ஏறியுள்ளது. கம்பத்தில் ஏறிய அந்த கரடி மின்கம்பிகளில் சிக்கியுள்ளது. இதனை பற்றி தெற்கு அரிசோனாவில் உள்ள வில்காக்ஸ் நகரத்தில் அமைந்துள்ள சல்பர் ஸ்பிரிங்ஸ் வேலி எலக்ட்ரிக் கூட்டுறவு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், இந்த கரடியை மீட்கும் முயற்சியில் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் அந்த கரடிக்கு மின்சாரம் தாக்காமல் இருப்பதற்காக மின்சாரத்தை துண்டித்தனர். அதன் பின்னர் கரடியை கீழே வர வைப்பதற்காக கண்ணாடியிழை குச்சியால் தட்டியுள்ளனர். ஆனால் அந்த கரடி குச்சிகளை பிடித்துள்ளது. பிறகு, அதுவே கீழே இறங்கி வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரடி மின்கம்பத்தில் இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“Alright, little bear. Time to get off this pole.”
After being called to the scene, utility workers immediately cut the power and then helped coax this bear off a power pole in Arizona. The bear eventually climbed down safely and ran off into the desert. https://t.co/N3YkuSiGgg pic.twitter.com/FJSe51UEXD
— ABC News (@ABC) June 10, 2021