ஆகஸ்ட் 2-ம் தேதி யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு…!
- யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முக தேர்வு ஆகஸ்ட்-2 தேதி முதல் மீண்டும் தொடங்கும்.
- நேர்முக தேர்விற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in-ல் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முக தேர்வு ஆகஸ்ட்-2 தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முக தேர்விற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in-ல் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் ஜூன் 27-க்கு பதிலாக அக்.21க்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.