தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை..!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை அளித்துள்ளனர்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை அளித்துள்ளனர். இதனால், ஜூன் 14 ஆம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் 21-ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது.
கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் தளர்வு இல்லை எனவும் பிற மாவட்டங்களில் நடைப்பயிற்சி, டாஸ்மார்க் கடைகள் திறக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பு வெளியிடுவார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025