மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜர்..!

- மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி உள்ளார்.
- மகரிஷி வித்யா பள்ளி நிர்வாகிகள் விசாரணைக்காக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர்.
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் விவகாரம் வெளியே வந்தவுடன் சென்னையில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சமூக வலைதளங்களில் முன்னாள் மற்றும் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
அந்த புகார் அடிப்படையில் காவல்துறை, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடக்கிறது. அந்தவகையில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆனந்தன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஆனந்தன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஆனந்தன் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? இதுவரையும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என உரிய விசாரணை நடத்த மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை தொடர்ந்து, பள்ளி தாளாளர் பிரீத்தி, குழுமத்தின் தலைமை கல்வி அதிகாரி பிரேமலதா ஆகியோர் விசாரணைக்காக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025