#BREAKING : மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒருநாள் உணவிற்கான செலவு ரூ.460-ஆக நிர்ணயம்…!

Default Image
  • சென்னை சைதாயப்பேட்டையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
  • கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவு அதிகப்பட்சம் ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவர்கள், செவிலியர்களின் ஒரு நாள் உணவு செலவிற்காக ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவு அதிகப்பட்சம் ரூ.460 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற உணவகங்கள் மூலமாக தரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இன்னும் 2 நாட்களில் தடுப்பூசி வரவுள்ளது. அவ்வாறு தடுப்பூசி வந்த பின் பிரித்து மாவட்ட வாரியாக தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வைரஸின் தீவிரத்தை உணர்ந்து, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுரை வழங்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்