கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு…5 பேருக்கு பலத்த காயம்

Default Image

பாகிஸ்தானில்  எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் வாஷுக் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 5 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பு குறித்த தகவல்களை மாவட்டத்தின் மாஷ்கெல் பகுதியின் உதவி ஆணையர் ஹமீத் ஹம்சா பாங்குல்சாய் பகிர்ந்து கொண்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாஷுக் மாவட்டத்தின் மாஷ்கெல்லில் ஒரு வெல்டிங் பட்டறையில் ஒரு பெருவெடிப்புடன் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக ஆணையர் ஹமீத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸாரும், மீட்புக் குழுக்களும் வெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாடிக்கையாளர்கள் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டரை சரிசெய்ய தொழிலாளர்கள் வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது வெடிப்பு நிகழ்ந்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 18042025
SRH Lose MI in ipl 2024 april 17
ADMK Chief secretary Edappadi Palanisamy
Nainar Nagendran - Annamalai
Mumbai Indians
SRHvsMI