“சாதி அரசியல் செய்வது மிகவும் தவறு” – சசிகலா பேச்சு..!

Default Image
  • சாதி அரசியல் செய்வது மிகவும் தவறு,அனைத்திற்கும் விரைவில் ஒரு முடிவு உண்டு;எனவே,கவலைப்படாதீர்கள் விரைவில் நான் எல்லோரையும் சந்திப்பேன் என்று,
  • சசிகலா தனது ஆதரவாளர்களுடன் நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன் பின்னர்,அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றார். இந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பிய சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதில்,”கஷ்டப்பட்ட வளர்த்த கட்சி வீணாவதை என்னால் ஒருபோதும் பார்த்து கொண்டிருக்க முடியாது.கொரோனா முடிந்ததும் மீண்டும் வருவேன்.கட்சியை சரி செய்து விடலாம்.எனவே,தைரியமாக இருங்கள்”, என்று கூறினார்.

மேலும்,அதைப் போலவே ஒவ்வொரு  தொண்டர்களையும் செல்போனில் தொடர்பு கொண்டு,அவர்களின் உடல்நலம் விசாரித்தல் மற்றும் கட்சி நிலவரம் பற்றியும் பேசி வருகிறார்.

அந்த வகையில்,மதுரையை சேர்ந்த திருநங்கை சுஜாதா ஹர்சினி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேகலா மற்றும் துரைராஜ், வின்சென்ட் ராஜா உள்ளிட்ட தனது ஆதரவாளர்களிடம் நேற்று சசிகலா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது:

  • “தற்போது கட்சியில் இருப்பவர்கள் யாரும் தொண்டர்கள் மனதை சரியாக புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
  • மேலும்,’சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு’,அனைத்திற்கும் விரைவில் ஒரு முடிவு உண்டு.
  • ஏனெனில்,தொண்டர்களோடு இருந்து,எம்.ஜி.ஆர். அவர்கள்,மற்றும் அம்மா ஜெயலலிதா அவர்கள்,எப்படி கட்சியை நடத்தினார்களோ?, நானும் அப்படிதான் கட்சியை நடத்துவேன்.
  • தொண்டர்களாகிய நீங்கள்தான் கட்சி என்று நான் நினைக்கிறேன்.எனவே,கவலைப்படாதீர்கள் விரைவில் நான் எல்லோரையும் சந்திப்பேன்.மேலும்,நல்லபடியாக கட்சியை கொண்டு வருவோம்.ஆட்சிக்கும் வருவோம்.
  • எல்லாமே என் பிள்ளைகள்தான்.கட்சிக்காகவும்,தொண்டர்களுக்காகவும் நிச்சயம் வருவேன்.
  • மேலும்,முக கவசம் அணியாமல் இருக்காதீர்கள்.அது ரொம்ப முக்கியம். வீட்டில் இருப்பவர்களுக்கும் சொல்லுங்கள்.அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் அதை சொல்லுங்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்