தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு…!விபரம் இதோ..!

Default Image
  • தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக,கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 வது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் வருகின்ற ஜூன் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

  • ஒரு மூட்டை சிமெண்ட்டின் முந்தைய விலை ரூ.350 ஆக இருந்தது.ஆனால்,தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்ந்துள்ளது.
  • அதைப் போன்று,ஒரு டன் ஸ்டீல் கம்பியின் முந்தைய விலை ரூ.58,000 இருந்தது.தற்போது ஒரு டன் ரூ.75,000 ஆக உயர்ந்துள்ளது.
  • ஒரு யூனிட் மணல் ரூ.3800 ஆக இருந்தது.தற்போது ரூ.5200 ஆக உயர்ந்துள்ளது.
  • ஒரு யூனிட் ஜல்லியின் முந்தைய விலை ரூ.3,500 ஆகும்.ஆனால்,தற்போது ரூ.5,000 உயர்ந்துள்ளது.
  •  ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற ஒரு  லோடு செங்கல் ரூ.27 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு,திடீரென கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்ததால் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்