பிரேமம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??
பிரேமம் படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அசின் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் பிரேமம். நிவின் பாலி, மடோனா, சாய் பல்லவி, செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 நாட்களுக்கு மேலாக ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் பெரியளவில் வெற்றிபெற்றது. தெலுங்கிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், முதலில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கதை எழுதும் போது நடிகை அசினை வைத்து தான் எழுதியிருந்தாராம்.