சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு!
சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஒருமனதாக மீண்டும் சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயல்படலாம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், காங்கிரசுடன் கூட்டணி வைப்பதா இல்லையா என்ற கொள்கை முடிவு எடுக்க மூத்த உறுப்பினர்கள் பலரும் காரசார விவாதம் நடத்தினர்.இறுதியாக காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றும், புரிந்துணர்வுடன் செயல்படலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியில் சீதாராம் யெச்சூரியின் கருத்துக்கு பெருமளவு ஆதரவு கிடைத்ததையடுத்து அவர் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி மக்களவைத் தேர்தலில் பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரையும் வீழ்த்துவதே முக்கியம் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.