சூப்பர்…!லோகோவிற்கு பதிலாக கொரோனா போராளிகளின் புகைப்படம் – டெட்டால் நிறுவனம் முடிவு…!

- டெட்டால் ஹேண்ட் வாஷ் (Hand Wash) பேக்குகளில்,நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக கொரோனா போராளிகளின் புகைப்படங்களையும்,
- அவர்களை பற்றிய சிறு குறிப்பையும் அச்சிட்டு விற்பனை செய்ய டெட்டால் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள நுகர்பொருள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான,ரெக்கிட் நிறுவனம்,அதன் பிரபலமான பிராண்டான,’டெட்டால்’ தயாரிப்பில்,அதன் நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக,கொரோனா போராளிகளின் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும்,கொரோனா காலத்தில் அவர்கள் ஆற்றிய சாதனைகள் குறித்த தகவலையும் வெளியிட உள்ளது.
அதாவது,‘டெட்டால் சல்யூட்ஸ்’ என்ற பிரச்சாரத்தின் கீழ்,டெட்டால் ஹேண்ட் வாஷ் பேக்குகளில்,லோகோவிற்குப் பதிலாக,நாடு முழுக்க உள்ள கொரோனா போராளிகளில்,100 பேர்களின் ஊக்கமளிக்கும் கதைகளை சிறுகுறிப்பாக அச்சிட உள்ளது.
இந்த போராளிகள் அனைவரும் கொரோனா தொற்று காலத்தில்,எண்ணற்ற மக்களுக்கு உதவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வரலாற்றின் முதல் முறையாக,ஒரு நிறுவனம் அதன் லோகோவை நீக்கிவிட்டு,அதற்கு பதில், கொரோனா போராளிகளின் படங்களை பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும்.
இந்த,டெட்டால் சல்யூட் பேக்குகள் வருகின்ற ஜூன் மூன்றாவது வாரத்திலிருந்து,இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட ஐந்து லட்சம் கடைகளில் 45 முதல் 60 நாட்களுக்குள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025