#Breaking:பிரதமர் மோடி இன்று அறிவித்த முக்கிய திட்டங்கள்…!
- பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக இன்று மாலை உரையாற்றினார்.
- அப்போது,அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி உள்ளிட்ட சில முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொடர்பாக தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அப்போது சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.அதன்படி,
- அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும்.
- தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு சேவை கட்டணமாக 150 ரூபாய்க்கு மேல் வசூலிக்க கூடாது.
- ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்.
- தீபாவளி வரை நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
- விரைவில்,மேலும் 3 தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்”,என்று அறிவித்தார்.