மக்களே இந்த பழத்தை எங்கு பார்த்தாலும் மறக்காம வாங்கிருங்க….!
- முலாம் பழத்தில் உள்ள நன்மைகள்.
- முலாம்பழம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இன்றைய நாகரிகமான உலகில் பலரும் வாய்க்கு ருசியான, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை தான் அதிகமாக தேடிச் செல்கின்றனர். ஆனால் இந்த உணவுகள் நமது உடலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியத்தை அளிப்பதாக இருப்பதில்லை.
பழங்களை எடுத்துக்கொண்டால் எந்த பழங்களை சாப்பிட்டாலும், அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக காணப்படும். அந்த வகையில் முலாம்பழம் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சிலர் இந்த முலாம் பழத்தை கிர்ணிபழம் என்றும், மஞ்சள்பூசணி என்றும் சொல்கின்றனர்.
ஆனால், முலாம்பழம் என்பது ஒரு வெள்ளரிக்காய் போன்ற அமைப்பைக் கொண்டது. இந்த பழம் அதிகமான விதைகளை கொண்டதாகும். இதில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள், ஆக்சாலிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளது.
மலசிக்கல்
இந்த பழத்தை தேன் அல்லது சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து மில்க் ஷேக் போன்றும் குடிக்கலாம். மூலம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு முலாம்பழம் ஒரு நல்ல மருந்தாகும். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூலம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நீங்கி விடும்.
செரிமானம்
பொதுவாக இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனைகள். இந்த பிரச்சனை உள்ளவர்கள் முலாம்பழத்தை, சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு பத்து நிமிடத்திற்கு முன் சாப்பிட்ட வேண்டும். பின் உணவை உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
அல்சர்
நம்மில் பலரும் இன்று வேலை, வேலை என அலைந்து, உணவையே மறந்து விடுகிறோம். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள விட்டால் நமக்கு அல்சர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள்முலாம்பழ சதையுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும். மேலும் இந்த பழத்தை சாப்பிட்டால் கண் பார்வையும் அதிகரிக்கும்.
உஷ்ணம்
இந்தப் பழம் கோடை காலத்தில் ஏற்படக்கூடிய சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் உடல் உஷ்ணத்தை தணிக்க இப்பழம் பயன்படுகிறது. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழத்தை அடிக்கடி நாம் உண்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.