#Breaking:”மத்திய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு;தமிழக அரசு அமைக்க வேண்டும்”-உயர்நீதிமன்றம் உத்தரவு…!
- மத்திய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க வேண்டும்,
- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன.அவற்றில் 8450 கோயில்களானது,100 ஆண்டுகள் மிகவும் பழைமை வாய்ந்தவையாக உள்ளன என்றும்,
மேலும்,6414 கோயில்கள் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும்,530 கோயில்கள் பாதி சேதமடைந்ததாகவும், 716 கோயிகள் முழுமையாக சேதமடைந்ததாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்,இக்கோயில்களை முறையாக சீரமைக்கப்படுவதாகவும் அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்களின் அமர்வு,கோயில்கள் பாதுகாப்பு குறித்து முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதாவது,தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,
- மத்திய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க வேண்டும்.
- நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்.
- கோயில்களின் பட்டியலை தயாரித்து,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும்.
- கோயில்களில் உள்ள சிலைகள்,நகைகள்,உள்ளிட்டவற்றை,பட்டியலாக தயாரிக்க வேண்டும்.
- கோயில்களின் சிலைகள்,நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களில் வெளியிட வேண்டும்.
- கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.
- கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை வகுத்து உடனடியாக வெளியிட வேண்டும்.
- அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு,புராதான கோயில்கள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் பாதுகாப்பதற்கு,தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.