உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த ‘பாகுபலி-2’ திரைப்படத்திற்கு வந்த சோதனை..!
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடிப்பில் வெளியான ‘முத்து’ படம் ஜப்பானில் ‘டேன்சிங் மகாராஜா’ என்ற பெயரில் வெளியாகி, 1. 6 ( இந்திய மதிப்பில் சுமார் 10.5 கோடி ரூபாய்) மில்லியன் டாலர் வசூலித்தது.
ஜப்பானில் அதிகம் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் ‘முத்து’ படம் பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படம், 1.48 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் 9.7 கோடி ரூபாய்) வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
‘பாகுபலி-2’ திரைப்படம் 100 நாட்கள் ஓடி, 1.3 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 8.3 கோடி ரூபாய்) வசூலித்து 3ஆம் இடத்தையே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது