இன்று முதல் குஜராத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி!
- இன்று முதல் குஜராத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
- அனைத்து விதமான கடைகளும் இன்று முதல் காலை 9 மணி முதல் 6 மணி வரை இயங்க அனுமதி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அது போல குஜராத்திலும் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது, எனவே ஜூன் 7ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இன்றுடன் குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு நிறைவடைய உள்ளதால், மேலும் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டு 11 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி ஜூன் 7 ஆம் தேதி அதாவது இன்று முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுபோல அனைத்து விதமான கடைகளும் இன்று முதல் காலை 9 மணி முதல் 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகளுக்கு இரவு 10 மணிவரை டெலிவரி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.