381 பேருக்கு கொரோனா – டெல்லியில் குறைந்து வரும் தொற்று எண்ணிக்கை..!
- டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 381 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை 76,857 பேருக்கு டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 381 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் நோய் தொற்று பாதிப்பு விகிதம் 1 சதவிகிதத்திலிருந்து 0.5 ஆக குறைந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,29,244 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 1,189 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,591 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 13,98,764 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது டெல்லியில் 5,889 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.