மக்களே இந்த பறவையை பார்த்துள்ளீர்களா…? ஆவடியில் ஆஸ்திரேலிய பறவை…! ஆர்வத்துடன் பார்த்த மக்கள்….!

  • ஆவடியில் ஆஸ்திரேலிய  ஆந்தை.
  • பறக்கமுடியாமல் தடுமாறிய ஆந்தைக்கு முதலுதவி செய்த வனத்துறையினர்.

பொதுவாகவே வெளிநாட்டு பறவைகள், சில குறிப்பிட்ட நாட்களில் மற்ற இடங்களுக்கு வலசை செல்வதுண்டு. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில், இன்று காலையில் அரியவகை ஆந்தை ஒன்று திடீரென்று கீழே விழுந்து கிடந்துள்ளது.

இந்த பறவையை பார்ப்பதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். அந்த பறவை பறக்க முடியாமல் தடுமாறிய நிலையில், சமூக ஆர்வலர் பாலமுருகன் என்பவர் அந்த ஆந்தையை மீட்டு,  ஆந்தையை குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

வனத்துறையினர் தகவல் அளிக்கப்பட்டு வெகு நேரத்திற்கு பிறகு வந்து அதை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர். இது ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை பறவை என்றும், மற்ற பறவைகளால் இது தாக்கப்பட்டு கீழே விழுந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.