திருமணம் செய்து கொள்வதாக கூறி செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்!
- சத்தீஸ்கரை சேர்ந்த செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த மும்பை மருத்துவர்.
- மும்பை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மும்பையில் அந்த செவிலியர் பணியாற்றிய மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் கூறுகையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த பின்பு மருத்துவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தற்போது ஏமாற்றி விட்டார் என செவிலியர் கூறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் நகரத்தில் உள்ள காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட செவிலியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு மும்பை பாந்த்ரா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, தற்போது இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.