COWIN செயலியில் தமிழை தவிர்த்து நீக்கப்பட்ட 9 பிராந்திய மொழிகள் மீண்டும் சேர்ப்பு…!

Default Image
  • கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு கண்டங்கள் எழுந்த நிலையில், 9 பிராந்திய மொழிகள் நீக்கம்.
  • இன்று (ஜூன் 6) நீக்கப்பட்ட 9 பிராந்திய மொழிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்பட்டு வந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிராந்திய மொழிகளில், இந்த இணையதளம் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவின் என்ற இணைய பக்கத்தில், ஜூன் 4-ம் தேதி மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி தவிர்த்து, 9 பிராந்திய மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பல அரசியல் பிரபலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி  சேர்க்கப்படாததற்கு  கண்டனங்கள் எழுந்த நிலையில், ஜூன்-5ம் தேதி அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம் பெற்றது. இந்நிலையில், இன்று (ஜூன் 6) தமிழை தவிர்த்து நீக்கப்பட்ட 9 பிராந்திய மொழிகளும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்