இரண்டாம் தவணை 2000 ரூபாய் எப்போது வினியோகிக்கப்படும்? அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

Default Image
  • ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் 15ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
  • இதற்கான டோக்கன் வினியோகம் 11ஆம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு 

கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதன்படி ஏற்கனவே முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தவணை 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மூன்றாம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட பொது வினியோகத் திட்டத்தில் இருந்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்கு ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் முக ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அதன் முதல் தவணை 2000 ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்ட நிலையில், இதன் தொடர்ச்சியான இரண்டாம் தவணை 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்க்கான திட்டத்தை மூன்றாம் தேதி முதல்வர் துவங்கி வைத்தார். இந்த பொது வினியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் செய்யும் நெறிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டு  உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன்கள் வருகிற 11ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் எனவும், இந்த டோக்கன் அடிப்படையில் 2,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வருகிற 15-ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் காலை 8 முதல் பகல் 12 மணி வரையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஒரே நேரத்தில் நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்களை பெற்று செல்லககூடிய வகையில் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்குமே இந்த நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்பதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் பெற முடியாதவர்கள் வரக்கூடிய மாதத்தில் அவர்களுக்கான மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை பெற்றுக் கள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை பெற செல்லக்கூடிய குடும்ப அட்டைதாரர்கள் தனிநபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற முக்கியமான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்