190 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வாத்தி கம்மிங்..!!

- மாஸ்டர் படத்திலிருந்து வெளியான வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் 190 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்த படத்திலிருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியானது. இந்த பாடல் தற்போது யூடியூபில் 190 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில கொண்டாடி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025