கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் – டெல்லி முதல்வர்!

Default Image
  • கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  • மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் 19,420 டன் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக டெல்லியில் கொரோனா வைரஸின் தீவிரம் குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தற்பொழுது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு தளர்வு குறித்து அறிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளதாகவும், புதிய வகை வைரஸ்களை கண்டறிய இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக டெல்லியில் 19,420 டன் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், மேலும்,150 டன் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இந்திரபிரசாதா கேஸ் நிறுவனத்திடம் பேசி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்