வழிதவறிச் சென்ற 3 வயது சிறுமிக்கு..!! துணையாக நின்ற காதுகேளாத..!! வளர்ப்பு நாயின் பாசம்..!!

Default Image

ஆஸ்திரேலியாவில், வழிதவறிச் சென்ற 3 வயது சிறுமிக்கு துணையாக நின்று, பாதுகாத்த வளர்ப்பு நாயின் விசுவாசம், நெகிழச் செய்வதாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் Cherry Gully பகுதியை சேர்ந்த, அரோரா என்ற 3 வயது பெண் குழந்தை மாயமானது. மலைப்பாங்கான அப்பகுதியில் குழந்தையை தேடுவதில் மீட்புக்குழுவினருக்கும் உறவினர்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.

எனினும், வசிப்பிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில், குழந்தை அரோரா, லேசான காயங்களுடன் மீட்கப்பட்டது. குழந்தையுடன் மேக்ஸ் என்ற வயதான, காதுகேளாத நாய், 15 மணி நேரத்துக்கும் மேலாக துணையாக இருந்து பாதுகாத்துள்ளது.

நன்றியுணர்வோடு குழந்தையை காத்த மேக்ஸின் செயல், பலரையும் நெகிழச் செய்துள்ளது. Queensland போலீஸார் தங்களது முகநூல் பக்கத்தில் நாய் மேக்ஸின் படத்தை பதிவுட்டு புகழாரம் சூட்டியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்