ஆசிய குத்துச்சண்டை இறுதிப்போட்டி;மேரி கோம் வெள்ளிப்பதக்கம்..!
- துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டி.
- இந்தியா வீராங்கனை மேரி கோம்,கஜகஸ்தானின் நசீம் என்பவரிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை தொடரின் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில்,இந்தியாவின் பிரபல வீராங்கனை மேரி கோம்,கஜகஸ்தான் வீராங்கனை நஸிமை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார்.
மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நசீமை அவரால் வீழ்த்த முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து,ஆரம்பம் முதலே கடுமையான சவால் அளித்த நஸிம்,இறுதியில் 2-3 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தினார்.இதனால், மேரி கோமிற்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
மேரி கோம்,இதுவரை 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.