காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாள்;முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!
- இன்று காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாள்.
- சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள அவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசின் சார்பாக கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி ,சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும்,அவருடன் மற்ற அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினேன்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்; முத்தமிழறிஞர் கலைஞருடன் நெருக்கமான நட்பு பாராட்டிய தமிழ் வீரர்.
அவர் வழியில் மதநல்லிணக்கம் காத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்”, என்று பதிவிட்டிருந்தார்.
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினேன்!
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்; முத்தமிழறிஞர் கலைஞருடன் நெருக்கமான நட்பு பாராட்டிய தமிழ் வீரர்!
அவர் வழியில் மதநல்லிணக்கம் காத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்! pic.twitter.com/i63quZrqWX
— M.K.Stalin (@mkstalin) June 5, 2021