அனைத்து மாவட்டங்களிலும் என்னென்ன தளர்வுகள்- முழு விபரம்..!
- தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- அனைத்து மாவட்டங்களிலும் மளிகை, காய்கறிகள், இறைச்சி, மற்றும் பூக்கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.
தமிழகத்தில், ஜூன்-7-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், கொரனோ பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளும், மீதமுள்ள மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வுகளும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கொரனோ அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் உட்பட 38 மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
- மளிகை, காய்கறிகள், இறைச்சி, மற்றும் பூக்கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.
- தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் செயல்பட அனுமதி.
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.
- மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
- கூட்டத்தை தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மீன் சந்தைகளை அமைக்க அனுமதி.
- தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
- தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி.
- தீப்பெட்டிதொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.