+12 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று கருத்துக்கேட்பு – அன்பில் மகேஷ்..!

Default Image

ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று நண்பகல் 12 மணிக்கு  காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். பிளஸ் டூ தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெற உள்ளது.

ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று நண்பகல் 12 மணிக்கு  காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என தெரிவித்தார். மேலும், பிளஸ் டூ தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன.

தேர்வை நடத்தவில்லை எனில் மேற்படிப்பிற்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வை நடத்துவதா..? இல்லையா..? என்பது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார். திடீரென நீட் தேர்வு நடந்தால் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சாதகமாக அமையும் என்ற கருத்தும் எழுந்துள்ளது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)