#BREAKING: சசிகலா அதிமுகவில் இல்லை- ஈபிஎஸ் பதில்..!

Default Image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சசிகலா இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தடுப்பு ஊசியை அதிக அளவிலேயே தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இந்திய அளவிலேயே அனைத்து மாநிலத்திலும் இன்று தடுப்பூசி வழங்கப்படுவதாக செய்தி வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் தமிழகத்திலே கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் பிரதமர்கள் தமிழகத்திற்கு கூடுதலான தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சமீபகாலமாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசி வருவதாக ஆடியோ வெளியாகிறது என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி ஒன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சசிகலா இல்லை. இரண்டாவது  நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் சசிகலா அவர்கள் அறிக்கையின் வாயிலாக ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும்  செய்திவெளியிட்டார்.

அதில், நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன் என்று இந்த செய்தி அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்தன. அதனால் அந்த கருத்து சொல்வதற்கு வாய்ப்பே இல்லை, இருந்தாலும் ஊடகத்திலும், பத்திரிக்கைகளிலும் வருவதாக சொல்கிறீர்கள்  அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக  தொண்டரொடு சந்தித்துப் பேசியிருக்கிறார். வேறொன்றும் கிடையாது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்