ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகளா? முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கின் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜூன் 7ஆம் தேதி அதிகாலையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்பட்டது.
அதன் படி தற்பொழுது தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் முழு ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்படுமா அல்லது தளர்வுகள் இல்லாமல் மேலும் முழு ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.