கொரோனா நிவாரண நிதிக்காக 10.25 லட்சம் வழங்கிய நடிகர் சூரி!

முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நடிகர் சூரி 10.25 லட்சம் நிவாரண நிதியை உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சென்று வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவல் தினமும் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு நிதி அளிக்க வேண்டுமென முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் ,அரசியல் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் கூட ஆன்லைன் மூலமாகவும் நேரில் சந்தித்தும் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர். திரையுலகில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விக்ரம், இயக்குனர் முருகதாஸ், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களால் முடிந்த அளவு நிவாரண நிதிக்காக பணத்தை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் பரோட்டா சூரி அவர்கள் 10 லட்சத்துக்கான காசோலை மற்றும் தன் மகன், மகளுடைய சார்பில் 25 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025