குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையில் பாட்னா..!
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வருடம் ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணியை தொடங்கினர்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மே 11 ஆம் தேதி குழந்தைகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி அளித்தது. அதைப்பற்றி குறிப்பிட்ட நீதி ஆயோக் மருத்துவக்குழு உறுப்பினர், 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த கோவாக்ஸின் மருந்தை 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியதாக கூறினார்.
அதனை தொடர்ந்து பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்ஸின் தடுப்பூசியை வைத்து இந்த பரிசோதனை செய்கின்றனர்.
தற்போது 18 முதல் 45 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான பரிசோதனையை தொடங்கியுள்ளது பாட்னா. மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.