#BREAKING: திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நகர்புற பேருந்துகளில் இலவச பயணம் – தமிழக அரசு..!

Default Image

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நகர்புற அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற உடனே தனது 5 முக்கிய திட்டங்களுக்கு ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில், ஒன்றுதான் அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்திற்கு கையெழுத்திட்டார். இந்நிலையில், தற்போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச  பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்