டெல்லியில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 89 பேர் பலி!

டெல்லியில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 1,044 பேர் பாதிக்கப்பட்ள்ளதுடன், 89 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் செய்கின்றனர். டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இருப்பினும் அங்கு கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இது வரை டெல்லியில் 1,044 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சை பெற்றவர்களில் 92 பேர் கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 89 பேர் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட டெல்லியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 10% பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025