சிபிஎஸ்இ-யில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பீதியடைய வேண்டாம் – சிபிஎஸ்இ!
சிபிஎஸ்இ வாரியத்தில் படிக்கக்கூடிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்க வேண்டும் என முடிவு செய்து வருவதாகவும் மாணவர்கள் பீதியடைய வேண்டாம் எனவும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தற்போது சிபிஎஸ்இ செயலாளர் கூறுகையில், சிபிஎஸ்இ வாரியத்தில் படிக்கக்கூடிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்யும் செயல்முறை தொடங்குகிறது எனவும், சிபிஎஸ்இ ஆசிரியர்களும் மாணவர்களும் மதிப்பெண் குறித்து பீதி அடைய வேண்டாம் எனவும், மதிப்பெண் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்ததும் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.