#Breaking:தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கலாம் – தமிழக அரசு உத்தரவு..!
தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,பள்ளர், தேவேந்திரகுலத்தார்,காலாடி, பண்ணாடி, குடும்பர், கடையர் ஆகிய ஆறு சாதிப் பிரிவுகளை உள்ளடக்கியவர்களுக்கு “தேவேந்திரகுல வேளாளர்” என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்த நிலையில், பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு,அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பின்னர்,கடந்த மே 15 ஆம் தேதி முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.எனவே, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் அனைவரும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.