புனேவில் புதிதாக டிரைவ்-இன் தடுப்பூசி மையம் ஆரம்பம்..!
புனேவில் கடந்த திங்கள் கிழமையன்று, முதல் முறையாக டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தை ஹடஸ்பரில் உள்ள ஆடிட்டோரியத்தில் திறந்து வைத்துள்ளனர்.
ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் இங்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கியுள்ளது. புனே முனிசிபல் கார்பெரேஷன் தொடங்கியுள்ள டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தில் முதல் நாளில் 64 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் முன்னுரிமை அளிக்கும் மையங்களில் இதுவே இந்நகரத்தின் முதல் தடுப்பூசி மையமாகும்.
இதை திறந்து வைத்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேதன் டூப் கூறுகையில், இந்த ஆடிட்டோரியம் பெருந்தொற்று காலத்தில் விரைவில் திறக்கப்படாத நிலையில் இருக்கும் மிகபெரிய பார்க்கிங் வசதி கொண்ட ஆடிட்டோரியம். நாங்கள் மிகப்பெரிய பார்க்கிங் வசதி கொண்ட இடத்தில் இந்த தடுப்பூசி மையத்தை அமைக்க நினைத்ததால் இவ்விடத்தை தேர்வு செய்தோம். இங்கு தடுப்பூசி போடுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் அரசு வழிகாட்டுதலின் படி, பதிவு செய்தும் நேரடியாக வந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தங்களின் ஆவண சரிப்பார்ப்பு முடிந்தவுடன் 3 நிமிடத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும். மேலும், தடுப்பூசி செலுத்தியவுடன் 30 நிமிடங்கள் கண்காணிப்பு பகுதியில் இருந்து வெளியேறும் வகையில் நெரிசல் இல்லாத பார்க்கிங் வசதி இவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வருவதற்கும் போவதற்கும் என்று தனித்தனி வழிகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
முதல் நாளில் இந்த தடுப்பூசி மையத்தில் 64 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 4 பேர் மாற்றுத்திறனாளிகள், ஒருவர் மனநலம் சரியில்லாதவர் மற்றும் 4 மூத்த குடிமக்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் 45 வயதிற்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், இங்கு தடுப்பூசியின் சிறப்பு தேவைகள் இருப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அங்குள்ள அதிகாரி தெரிவித்துள்ளார்.