தடுப்பூசி கொள்முதல் விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் -உச்சநீதிமன்றம் உத்தரவு..!
தடுப்பூசி கொள்முதல் விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவும் நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக,தடுப்பூசி போடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.ஆனால்,தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன்காரணமாக,தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வரவில்லை என்றும் சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்கள்,மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதில் மத்திய அரசின் கொள்கை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனவும்,தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி கொண்டிருந்தது.
இந்நிலையில்,கோவிஷீல்டு,கோவாக்சின்,ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளை கொள்முதல் செய்தது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது,தடுப்பூசி கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதி முதல்,தற்போது வரை ஒவ்வொரு தேதியிலும் எவ்வளவு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டது என்றும் ,
மேலும்,இதுவரை மத்திய அரசுக்கு எந்தெந்த தேதிகளில் தடுப்பூசி வந்து சேர்ந்தது என்றும் தெரிவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்களை,டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பிரமாண பத்திரம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம்,மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.