#BREAKING : ஊரடங்கு நீடிப்பா…? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு, ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது.  இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது,  தடுப்பூசி பயன்பாடு குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக மீண்டும் ஒரு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில், அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், தொற்று அதிகமாக உள்ள இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மூன்றாம் அலை வரும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குறைவான மக்களே தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர். எனவே அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை நடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.