தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி என்ற பேச்சுக்கே இடமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி இல்லை என்ற நிலை எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அம்மன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்தை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 26-ஆம் தேதி 252 மருத்துவர்கள், 350 செவிலியர்கள், ஆயிரம் மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் நேரடியாக பணி நியமனங்களை அளிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.