புதுக்கோட்டை அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவச உணவு வழங்கப்படும் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

Default Image

புதுக்கோட்டையில் இயங்கி வரக்கூடிய அம்மா உணவகத்தில் இன்று முதல் ஊரடங்கு முடியும் வரை தனது சொந்த செலவில் இலவச உணவு வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் அறிவித்துள்ளார்.

மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது அம்மா உணவகம் என்ற திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. இந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஏழை எளிய மக்கள் அனைவரும் மூன்று வேளையும் குறைந்த விலையில் உணவு வாங்கி உண்டு வந்தனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த அம்மா உணவகம் தொடருமா என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வந்தாலும் தொடர்ந்து அம்மா உணவகம் அதே பெயருடன் இயங்கும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.

மேலும் திமுக கட்சியை சேர்ந்த பலர் அம்மா உணவகத்தில் தற்பொழுது இலவசமாக உணவு வழங்குவதற்காக நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் செயல்படக்கூடிய அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் இயங்கக்கூடிய அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை தனது சொந்த செலவில் அவர் உணவு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்