#Breaking:தமிழகத்திற்கு 4.20 லட்சம் தடுப்பூசிகள் விமானம் மூலம் வருகை…!

Default Image

தமிழகத்திற்கு தேவையான 4.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்து சேர்ந்தன.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.மேலும்,மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் தயக்கம் இருந்த நிலையில் பின்னர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி எப்போது அனுப்பப்படும் என்பது ஜூன் 6-ஆம் தேதிக்கு பிறகே தெரியும்.தற்போது, 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையில் உள்ள நிலையில் அவை நாளையுடன் தீர்ந்து விடும் இதன்காரணமாக ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவித்தார்.

இதனையடுத்து,தமிழகத்திற்கு 4,20,570 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  சென்னை வருகிறது என சுகாதாரத்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,தற்போது 4,20,570 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்துள்ளன.எனவே,கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்,தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படாது என எதிர்பாக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்