3 வகைகளாக பிரிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள்…! அரசு வெளியிட்ட புதிய நெறிமுறைகள்….!
மக்கள் நல்வாழ்வு துறை, கொரோனா நோயாளிகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல், தீவிரமாக பரவி நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அந்த வகையில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை, கொரோனா நோயாளிகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,
- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு 94 கீழே இருந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது. அவ்ரகளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஆக்சிஜன் அளவு 90 – 94 உள்ளவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.
- ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.