#BREAKING: ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி..!

Default Image

போக்சோ நீதிமன்றம் ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபாலன் தரப்பில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஜாமீன் மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்றம் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. பின்னர், ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆசிரிய ராஜகோபாலன் மீது  இதுவரை 5 பேர் பாலியல் புகாரை காவல்துறையில் நேரடியாக கொடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்